
(7 Feb) ஸ்ரீநகர்: இந்தியாவில் இளம் சிறுமிகளுக்கு ஆக்சிடோசின் ஊசி போட்டு விரைவாக பருவமடையச் செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் கொடுமை வேகமாகப் பரவி வருகின்றது. மேலும், பல்வேறு தவறான வழிகளுக்கு அந்த ஊசியானது பயன்பட்டு வருகின்றது. உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் ஊசி இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை, பருவம் அடைய வைக்க விபசார கும்பல் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள அனுமதி பெறாத மருந்து கடை ஒன்றில் பெருமளவிலான ஆக்சிடோசின் கைப்பற்றப்பட்டதன் மூலம், இது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விரைவில் குழந்தை பெறவும் இந்த ஊசி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஊசி விற்கப்படுவதை விழிப்புடன் கண்காணித்து தடுக்கவேண்டும் என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. விவசாயிகள் இந்த ஊசியை செலுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவை அதிகரிக்க செய்துள்ளதாகவும் சி.டி.எஸ்.சி.ஓ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment