By OneIndia Tamil, 06 Feb 2015 09:09 AM

(6 Feb) கிருஷ்ணகிரி: 6 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தாத்தா கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி ஜடையன்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். லாரி டிரைவரான இவருக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு தீபா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பூஜா (6) என்ற மகள் இருந்தாள். பூஜா 6 மாத குழந்தையாக இருந்த போது தீபா இறந்து விட்டார். எனவே கோபால கிருஷ்ணன் 2வதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி முத்துலட்சுமி (20) தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். கோபாலகிருஷ்ணன் லாரி டிரைவர் என்பதால் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் லாரியில் வேலைக்கு சென்று விடுவார். இதனால் குழந்தை பூஜா, தனது சித்தி முத்துலட்சுமி மற்றும் தாத்தா பழனி (63), பாட்டி முத்தம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தாள். யு.கே.ஜி. படித்து வந்த பூஜா, நேற்று முன்தினம் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினாள். இரவு தனது தாத்தா பழனி அருகே படுத்து தூங்கினாள். மற்றொரு இடத்தில் அவரது சித்தி முத்துலட்சுமியும், பாட்டி முத்தம்மாளும்தூங்கினார்கள். இரவு எழுந்த பழனி, சிறுமி பூஜாவை காணவில்லை என்று அலறியடித்தபடி கூறினார். இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பூஜாவை தேடினார்கள். வீட்டு அருகில் உள்ள ஒரு கிணற்றில் சிறுமி பூஜா விழுந்து கிடந்ததை பார்த்துள்ளனர். சிறுமியின் சாவில் சந்தேகம் அடைந்த சிலர் இது குறித்து கல்லாவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் சிறுமி பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி பூஜாவை அவளது தாத்தா பழனியே, பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, கிணற்றில் வீசி நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து பழனியை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் சித்தி முத்துலட்சுமியையும் போலீசார் கைது செய்துள்ளனர். தனது குழந்தைக்கு, பூஜா இடையூறாக இருக்க கூடாது என்று பழனியுடன் சேர்ந்து முத்துலட்சுமி இந்த சதி திட்டத்தை தீட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment