Friday, February 27, 2015

Saturday, February 7, 2015

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த தாத்தா, உடந்தையாக இருந்த சித்தி கைது!

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த தாத்தா, உடந்தையாக இருந்த சித்தி கைது!

6 vayathu sirumiyai balathkaram seythu kolai
(6 Feb) கிருஷ்ணகிரி: 6 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தாத்தா கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி ஜடையன்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். லாரி டிரைவரான இவருக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு தீபா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பூஜா (6) என்ற மகள் இருந்தாள். பூஜா 6 மாத குழந்தையாக இருந்த போது தீபா இறந்து விட்டார். எனவே கோபால கிருஷ்ணன் 2வதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி முத்துலட்சுமி (20) தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். கோபாலகிருஷ்ணன் லாரி டிரைவர் என்பதால் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் லாரியில் வேலைக்கு சென்று விடுவார். இதனால் குழந்தை பூஜா, தனது சித்தி முத்துலட்சுமி மற்றும் தாத்தா பழனி (63), பாட்டி முத்தம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தாள். யு.கே.ஜி. படித்து வந்த பூஜா, நேற்று முன்தினம் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினாள். இரவு தனது தாத்தா பழனி அருகே படுத்து தூங்கினாள். மற்றொரு இடத்தில் அவரது சித்தி முத்துலட்சுமியும், பாட்டி முத்தம்மாளும்தூங்கினார்கள். இரவு எழுந்த பழனி, சிறுமி பூஜாவை காணவில்லை என்று அலறியடித்தபடி கூறினார். இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பூஜாவை தேடினார்கள். வீட்டு அருகில் உள்ள ஒரு கிணற்றில் சிறுமி பூஜா விழுந்து கிடந்ததை பார்த்துள்ளனர். சிறுமியின் சாவில் சந்தேகம் அடைந்த சிலர் இது குறித்து கல்லாவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் சிறுமி பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி பூஜாவை அவளது தாத்தா பழனியே, பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, கிணற்றில் வீசி நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து பழனியை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் சித்தி முத்துலட்சுமியையும் போலீசார் கைது செய்துள்ளனர். தனது குழந்தைக்கு, பூஜா இடையூறாக இருக்க கூடாது என்று பழனியுடன் சேர்ந்து முத்துலட்சுமி இந்த சதி திட்டத்தை தீட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டில் 10 வயது சிறுமி பலாத்காரம்- நேபாள வாலிபர் கைது

சென்னை கோயம்பேட்டில் 10 வயது சிறுமி பலாத்காரம்- நேபாள வாலிபர் கைது

sennai koyambettil 10 vayathu sirumi balathkaram-(7 Feb) சென்னை: கோயம்பேட்டில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செயய்ப்பட்டார். இது தொடர்பாக நேபாள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரேம் பகதூர்- பார்வதி தம்பதி தங்களது 10 வயது மகளுடன் கோயம்பேடு சேமாந்தம்மன் நகரில் அட்டை பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது உறவினர் குமார் பகதூரும் (30) இந்தக் குடும்பத்தினருடன் தங்கியிருந்து அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந் நிலையில் 2 நாட்களுக்கு முன் குமார் பகதூர், தனது 10 வயது மகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கோயம்பேடு போலீசில் பார்வதி புகார் செய்தார். இதையடுத்து குமார் பகதூர் தப்பியோடிவிட்டார். கோயம்பேடு போலீஸார் தனிப்படை அமைத்து குமார் பகதூரை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் அருகே கைது செய்தார். பின்னர் அவர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறுமி பலாத்காரத்துக்கு உள்ளானது 
உறுதியானது. குமார் பகதூர் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் சிகிச்சைக்காக அந்தச் சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இளம் சிறுமிகளுக்கு ஆக்சிடோசின் ஊசி போட்டு விரைவாக பருவமடையச் செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் கொடுமை

மீண்டும் தலைதூக்கும் 'ஆக்சிடோசின்' அரக்கன்: விபச்சாரத்தில் தள்ளப்படும் சிறுமிகள்

meendum talaithookkum 'aakchidosin' arakkan: vibacharathil tallappadum(7 Feb) ஸ்ரீநகர்: இந்தியாவில் இளம் சிறுமிகளுக்கு ஆக்சிடோசின் ஊசி போட்டு விரைவாக பருவமடையச் செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் கொடுமை வேகமாகப் பரவி வருகின்றது. மேலும், பல்வேறு தவறான வழிகளுக்கு அந்த ஊசியானது பயன்பட்டு வருகின்றது. உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் ஊசி இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை, பருவம் அடைய வைக்க விபசார கும்பல் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள அனுமதி பெறாத மருந்து கடை ஒன்றில் பெருமளவிலான ஆக்சிடோசின் கைப்பற்றப்பட்டதன் மூலம், இது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விரைவில் குழந்தை பெறவும் இந்த ஊசி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஊசி விற்கப்படுவதை விழிப்புடன் கண்காணித்து தடுக்கவேண்டும் என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. விவசாயிகள் இந்த ஊசியை செலுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவை அதிகரிக்க செய்துள்ளதாகவும் சி.டி.எஸ்.சி.ஓ தெரிவித்துள்ளது. 
மாட்டுப்பண்ணை வைத்துள்ளவர்கள் அதிகமாக பால்கறப்பதற்காக பசுமாட்டிற்கும் இந்த ஊசியை போடுவதாகவும் தெரிகிறது. இதனால் விரைவில் பசுவும் உயிரிழந்து அதன் உரிமையாளரும் பொருளாதார ரீதியாக நஷ்டமடைய நேரிடுகிறது என மருந்து தர கட்டுப்பாட்டு துறை தலைவர் ஜி.என்.சிங் கூறியுள்ளார். தென் இந்தியாவில் தர கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில், 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டது தெரிவித்துள்ளது. சிகப்பு விளக்கு பகுதிகளான ராஜஸ்தானில் உள்ள சோடாவாஸ் மற்றும் கிர்வாஸ் கிராமங்களில் 10 வயதே நிரம்பிய குழந்தைகளுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இனியும் இது போன்ற அத்துமீறல்கள் நிகழாமல், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்து தடுப்பு துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று சி.டி.எஸ்.சி.ஓ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்கள் கேலி செய்ததால் விடுதியில் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை

மாணவர்கள் கேலி செய்ததால் விடுதியில் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை

மாணவர்கள் கேலி செய்ததால் விடுதியில் தங்கிப்படித்த 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10–ம் வகுப்பு மாணவி 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தை அடுத்த கீழ் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன், இவருடைய மனைவி ராணி. இருவரும் கூலி தொழிலாளர்கள்.

இவர்களுடைய மகள் லாவண்யா (வயது 15), ஜவ்வாதுமலையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் குளிக்க சென்றனர். ஆனால் லாவண்யா மட்டும் அறையில் இருந்தார். மற்ற மாணவிகள் குளித்து விட்டு அறைக்கு திரும்பியபோது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை


ஜன்னல் வழியாக பார்த்தபோது லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து போளூர் போலீசார் சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதத்தில் உருக்கமான தகவல்கள் இருந்தன. அதனை ஜவ்வாதுமலை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உருக்கமான கடிதம்

மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

‘‘அம்மா என்னை மன்னிச்சிடு, எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை, அதனால் வேறு உலகத்திற்கு போகிறேன். கண்டிப்பாக உங்களை பார்க்க ஒரு நாள் வருவேன். பாப்பா, தம்பி, அப்பா, ஆயா, மாமா, அக்கா, சொக்கநாதன் எல்லோரையும் பார்க்க ஒரு நாள் வருவேன்.

பாப்பாவை மட்டும் எந்த விடுதியிலும் சேர்க்காதே, அப்படி சேர்த்தால் பெண்கள் மட்டும் இருக்கிற விடுதியில் சேர்க்க வேண்டும். ஆண்கள் படிக்கும் பள்ளியில் மட்டும் சேர்க்காதே. என்னை (கலாய்க்கிற) கேலி செய்தவங்க நல்லாவே இருக்கக்கூடாது. அவர்களை நான் சும்மா விட மாட்டேன். என்னுடைய சாவை நானே தேடிக்கொண்டேன்’’.

மேற்கண்டவாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் மூலம் மாணவர்கள் கிண்டல் செய்ததால்தான் லாவண்யா தற்கொலை செய்துள்ளார் என்று போலீசார் கருதுகிறார்கள். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது அருந்த தந்தை பணம் தராததால் மகன் தற்கொலை

மது அருந்த தந்தை பணம் தராததால் மகன் தற்கொலை

(2 Feb) பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, மது அருந்துவதற்கு பணம் தர தந்தை மறுத்து விட்டதால், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவதானப்பட்டி, நாடார் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் தமிழரசன்(30). மது பழக்கத்துக்கு அடிமையாக இருந்த தமிழரசன், தனது தந்தை பெரியசாமியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பெரியசாமி பணம் தர மறுத்ததால் வீட்டில் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்ட தமிழரசன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து பெரியசாமி அளித்த புகாரின் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகமாக கைப்பேசியில் பேசியதால் கண்டிப்பு: 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை

அதிகமாக கைப்பேசியில் பேசியதால் கண்டிப்பு: 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை

athikamaga kaippesiyil besiyathal kandippu: 8-m vakuppu(9 Jan) சென்னை கோயம்பேட்டில் அதிகமாக கைப்பேசியில் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால், 8-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கோயம்பேடு சேமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மனைவி கிரிஜா. இத் தம்பதியின் மகள் பவித்ரா (13). இவர் விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பவித்ரா, அதிகமாக கைப்பேசியில் பேசி வந்தாராம். இதை அவர் பெற்றோர் கண்டித்தனராம். இதனால் மன வேதனையில் பவித்ரா சிக்கித் தவித்தாராம். இதையடுத்து பவித்ரா வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி விடுதியில் 10 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

பள்ளி விடுதியில் 10 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

balli viduthiyil 10 vakuppu manavi tookkittu(5 Feb) செங்கம் அருகே பள்ளி விடுதி அறையில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த லாவண்யா (15), ஜவ்வாதுமலை அடுத்த அத்திமலைபட்டு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை லாவண்யா அங்குள்ள விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து ஜம்னாமரத்தூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருபாலர் பயிலும் கல்வி நிலையங்களில் வளர்இளம் பருவத்தினருக்கு மன பாதிப்புகள் குறைவு

இருபாலர் பயிலும் கல்வி நிலையங்களில் வளர்இளம் பருவத்தினருக்கு மன பாதிப்புகள் குறைவு: மனநல நிபுணர் தகவல்

irubalar bayilum kalvi nilaiyangalil valarilam baruvathinarukku(6 Feb) ஈரோடு அருகே நஞ்சனாபுரம் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கான மன நல ஆலோசனை கருத்தரங்கில் அவர் பேசியதாவது: பொதுவாக வளர்இளம் பருவத்தில் பள்ளி, கல்லூரிகளில் தனித்தனியாக பயிலும் மாணவ, மாணவிகள் மனரீதியாக சில சிக்கல்களை சந்திக்கின்றனர். ஆனால், மாணவ, மாணவிகள் சேர்ந்து பயிலும் கல்வி நிறுவனங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. மாணவ, மாணவிகள் ஒரு தலை காதல் ஏற்படும்போது தான் கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் பழங்காலத்தில் இருந்தே நடக்கின்றன. இப்போது விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன. குழந்தைகள், மாணவிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இதைவைத்து ஒட்டுமொத்த சமூகத்தில் நற்பண்புகள் குறைந்துவிட்டது எனக் கூற முடியாது என்றார். மனதின் மையம் மூலம் இக்கல்லூரியில் பணியாற்றும் 40 பேராசிரியர்களுக்கு ஏற்கெனவே மனநல ஆலோசனை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை

பள்ளி மாணவி தலைமுடியை வெட்டிய 2 ஆசிரியர்கள் சஸ்பென்ட்

பள்ளி மாணவி தலைமுடியை வெட்டிய 2 ஆசிரியர்கள் சஸ்பென்ட்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவி தலைமுடியை வெட்டிய 2 ஆசிரியரை சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் தேவி, சுமதியை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இனாம்காரியந்தலில் 9ம் வகுப்பு மாணவி விஷம் அருந்தி நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றனர். மாணவர்கள் முன்னிலையில் 2 ஆசிரியை மாணவியின் தலைமுடியை வெட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.