
(5 Feb) செங்கம் அருகே பள்ளி விடுதி அறையில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த லாவண்யா (15), ஜவ்வாதுமலை அடுத்த அத்திமலைபட்டு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை லாவண்யா அங்குள்ள விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து ஜம்னாமரத்தூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment